ட்ரெண்டிங்

ஆக்கிரமிப்பில் இருந்த பூங்கா நிலம், பாதை மீட்பு! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் பேரூராட்சிக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூங்கா நிலம் மற்றும் பாதை மீட்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அளவீடு செய்து நிலத்தை மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

ஓமலூர் அம்மன் நகரில் பூங்கா கட்டுவதற்காக சுமார் 4,000 சதுர அடி நிலம் மற்றும் அதற்கான பாதை ஆகியவை இருந்தது. இந்த நிலம் தனியாரால் சுவர் எழுப்பி ஆக்கிரமிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள், பேரூராட்சித் தலைவர் செல்வராணியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, நிலத்தை அளவீடு செய்ததில் 4,000 சதுரஅடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிய வந்தது. 

தற்போது பூங்கா நிலம், பாதை ஆகியவை மீட்கப்பட்டது.