சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் 2,000- க்கும் மேற்பட்ட மீனவர்கள் உரிமம் பெற்று, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், தற்போது மீன்பிடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கெளுத்தி, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளனர்.
கரை ஒதுங்கிய மீன்களை மீனவர்கள் டன் கணக்கில் அள்ளிச் சென்றனர். இதனிடையே, 2ஆவது நாளாக வலது கரையில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்த நிலையில், இன்றும் மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



-hcTFAGMRGb.jpg)