ஆத்தூர் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பைக் மெக்கானிக் உயிரிழந்தார்.
சேலம் காட்டுக்கோட்டை எல்ஆர்சி நகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, ஆத்தூருக்கு இருசக்கர வாகனத்திற்கான உதிரி பாகங்களை வாங்குவதற்காகச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அம்மம்ப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார், பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆத்தூர் காவல்துறையினர், பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், தப்பியோடிய கார் ஓட்டுனரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் .


-SXgDfGgJfO.jpg)