சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப்பாதையில் நிலைத் தடுமாறி விழுந்த முதியவரை, சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவ்வழியாகச் சென்ற தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாகனத்தை நிறுத்தி, அந்த முதியவரைத் தூக்கி உதவியதுடன், அவரை பத்திரமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.
அமைச்சரின் இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக ஆர்வலர்கள், சேலம் மாவட்ட மக்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வின் போது, தமிழக கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


