ட்ரெண்டிங்

சேலம் பள்ளிகளில் ஆதார் பதிவுச் செய்யும் சிறப்பு முகாம் தொடக்கம்! 

ஆதார் அட்டைகள் பெறுவதில் மாணவச் செல்வங்களுக்கு உள்ள குறைகளையும், நேர நெருக்கடிகளையும் போக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் அட்டைகளுக்கு பதிவுச் செய்யும் வகையில், ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாமை, கோவை மாவட்டம் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். 

பின்னர், மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவுச் செய்யப்படுவதைப் பதிவுச் செய்வதை நேரில் பார்வையிட்டதுடன், மாணாக்கர்களிடம் கலந்துரையாடினார். 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கான ஆதார் பதிவு செய்யும் முகாம்கள் இன்று (பிப்.23) நடைபெற்றன. சேலம் மாவட்டம், குகை அரசு நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆதார் பதிவு சிறப்பு முகாமினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை நேரில் பார்வையிட்டார்.  இந்த நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்