ட்ரெண்டிங்

வரத்துக் குறைவால் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் வரத்துக் குறைவால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. 

கர்நாடகா, ஆந்திராவில் பெய்த மழையால் ஓமலூர் சந்தைக்கு வெங்காயத்தின் வரத்துக் குறைந்துள்ளது. இதனால் ரூபாய் 25- க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், ரூபாய் 35 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் சாகுபடி பாதித்துள்ளதால், அதன் வரத்தும் குறைந்துள்ளது. 

ரூபாய் 45- க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூபாய் 70 ஆக அதிகரித்துள்ளது. விலையேற்றத்தால் மக்கள் குறைந்த அளவிலேயே வெங்காயத்தை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.