ட்ரெண்டிங்

அண்ணாமலை மீது வழக்கா?- ஆளுநர் விளக்கம்! 

அண்ணாமலை மீதான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை எந்த தகவலும் வெளியிடவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.