ட்ரெண்டிங்

சேலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!!

 

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் -சி ஐ டி யு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணி செய்யும் திட்டம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணி என்பது அரசு ஊழியருக்கான பணியாக இல்லாமல் இருப்பதை கண்டித்தும் தொடர்ந்து அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10 லட்சமும் உதவியாளர்களுக்கு 5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் பணி ஓய்வுக்கு பிறகு அகவிலை பணியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியமாக மாதம் ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும். மே மாதம் விடுமுறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும் 1993-ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் 5ஜி அலைபேசி சிம் வழங்கி அனைத்து மையங்களுக்கும் இணைப்பை உடனடியாக கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ. உமா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். வசந்தகுமாரி பொருளாளர் செல்வராணி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ். கே. தியாகராஜன் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி அருள்மொழி, தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க நிர்வாகி கார்த்திக், சுப்பிரமணி உள்ளீட்டு பலர் பங்கேற்றனர்.