ட்ரெண்டிங்

ஓமலூர் ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்

வழக்கமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகும் நிலையில், இன்று (மார்ச் 16) ஆடுகள் விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது. அதற்கான காரணங்கள் என்னவென்று விரிவாகப் பார்ப்போம்!  

சேலம் மாவட்டம், ஓமலூரில் சனிக்கிழமைதோறும் கூடும் வாராந்திர ஆட்டுச்சந்தையில் எப்போதுமே விற்பனை களைகட்டும். ஆனால் இன்று கூடிய  45 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்டுச்சந்தைக்கு வழக்கம் போல் ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் வளர்ப்பு ஆடுகளை விற்பனை செய்ய அழைத்து வந்திருந்தனர். விலையும் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று குறைவாக இருந்தது.

இருப்பினும் பங்குனி மாதம் பிறந்துள்ளதால் இப்பகுதி மக்கள் மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து வழிபாடு செய்வார்கள் எனபதால் ஆடு விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். மாதம் முழுவதுமே ஆடுகள் விலை குறைந்து தான் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.