ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக சென்னை எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 13- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அன்று இரவு 08.28 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். 2 நிமிடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புறப்படும் ரயில், மறுநாள் (செப்.14) காலை 08.30 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.



