அட்சய திருதியையொட்டி, சேலத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் 3ஆவது முறையாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்து, ரூபாய் 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 1.20 உயர்ந்து ரூபாய் 91.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அட்சய திருதி நாளான இன்று புதிதாக ஆபரணங்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பதால், சேலம் மாநகரில் உள்ள தங்க நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களை கவரும் வகையில், பல்வேறு தள்ளுபடிகளை நகைக்கடைகள் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்களின் கூட்டம் வழக்கத்தை விட கூடுதலாக உள்ளதாக ஜுவல்லரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைகளிலும் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



