ட்ரெண்டிங்

சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்றிரவு காணலாம்! 

சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்றிரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது. 

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இருந்து இன்றிரவு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். இன்றிரவு 07.09 மணியில் இருந்து 7 நிமிடங்களுக்கு வானத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் தெரியும். பூமியில் இருந்து 500 கி.மீ. உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் சுற்றி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.