ட்ரெண்டிங்

ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

ஐடிஐ படிப்புகளுக்கு இன்று (மே 10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில்நுட்ப நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 102 அரசு மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். 

ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற 8 மற்றும் 10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். https://skilltraining.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 06- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதள வசதியில்லாதவர்கள் 136 உதவி மையங்களிலும் பதிவுச் செய்யலாம். ஐ.டி.ஐ. சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 94990- 55689 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.