ட்ரெண்டிங்

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 

தமிழகத்தில் 2023- 24 ஆம் கல்வியாண்டுக்கான 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் 10- ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 10) காலை 09.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்தாண்டு 91.39% மாணவர்கள் தேர்ச்சிப் பெற்ற நிலையில், இந்தாண்டு 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மொத்தம் 8.94 லட்சம் மாணவ, மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8.18 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் (5.95%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.