ட்ரெண்டிங்

சேலத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுமார் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட 100- க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிர்வாகிகள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

சேலம் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் வெங்கடாசலம், என்.ஆர்இளங்கோவன், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், செல்வராஜ், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் மமற்றும் கட்சியின் நிரிவாகிகள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.