சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக மாநகராட்சியின் உரிய அனுமதியின்றியும், விதிகளை மீறியும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இன்று (நவ.12) காலை முதல் அகற்றி வருகின்றனர்.
இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையாளர் ஒவ்வொரு கடைகளாக சென்று பார்வையிட்டு ஊழியர்களைக் கொண்டு அகற்றி வருகிறார். மாநகராட்சி ஆணையாளரின் அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கடைகளில் அதிரடியாக சோதனையிட்டு வருகின்றனர். அப்போது, கடைகளில் உரிய தேதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.



-hcTFAGMRGb.jpg)