தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு மற்றும் கலப்பு, கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதித்துள்ள தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, அவற்றின் கலப்பினங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது. பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்ட் ஷயர் டெரியர், பிலா ப்ரோசிலேரியா, அமெரிக்கன் புல் டாக், டோன் ஜாக், ராட்வீலர்ஸ், டெரியர், ரோடீசியன் உள்ளிட்ட நாய் இனங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல், 23 வகை நாய் இனங்களை இறக்குமதி, இனப்பெருக்கம், வளர்ப்புப் பிராணியாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாய்களை வளர்ப்போரின் கவனத்திற்கு!
பொது இடங்களுக்கு கூட்டிச் செல்லும் நாய்களுக்கு கட்டாயம் சங்கிலி, முகக்கவசம் அணிவிக்க வேண்டும்; தரமான கழுத்துப்பட்டை அணிவித்து உரிமையாளர்கள் நாய்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நாய் இனங்களை வளர்ப்போர் அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.


