ட்ரெண்டிங்

சேலம்- சென்னை இடையே மாலையிலும் விமான சேவை! 

சேலம்- சென்னை இடையே மாலையிலும் விமான சேவை வழங்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சேலம் விமான நிலையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில், சென்னையில் இருந்து புறப்படும் விமானம் காலை 11.40- க்கு சேலம் வந்து பின் சென்னைக்கு, 12.00- க்கு புறப்படுகிறது. மற்ற விமானங்கள், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவிட்டு பிறகு சென்னை செல்கிறது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 17 முதல் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 04.40- க்கு சேலம் வந்து மலை 05.00 மணிக்கு சென்னை புறப்பட உள்ளது. இதன்மூலம் அந்த 3 நாட்களில், காலை, மாலை என இருமுறையும், சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்க உள்ளது. இதற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக, இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.