ட்ரெண்டிங்

கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

பள்ளிக் கல்வியை நிறைவுச் செய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!

இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.