சேலம் மாவட்டம், நெத்திமேடு பகுதியில் அம்சாயி ஈஸ்வரன் கோயில் உள்ளது. இதற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் 1190- ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட சுமார் 725 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்த தகவலின் பதில் சம்பவ இடத்திற்கு விரிந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் கல்வெட்டினை ஆய்வு செய்தனர். ஆய்வில் இந்த கல்வெட்டு சேலம் நாமக்கல் கல்வெட்டுப் புத்தகத்தில் 258, 259 ஆகிய கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டது. மேலும் அங்கு திரிபுர நாயனார் உடனுறை அம்மன், மகிஷாசுரமர்த்தினி,சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சாமி சிலைகள் கண்டறியப்பட்டது. இங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இந்த கோயிலுக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து சாமி சிலைகளை அங்கு வழிபாட்டிற்கு நிறுவி இன்று அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாட்டில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான குலோத்துங்க சோழன் காலத்து சாமி சிலைகள் மீண்டும் பூஜிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


-SXgDfGgJfO.jpg)