விளையாட்டு

டி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு! 

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ. 

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், ஷிவம் துபே, சாஹல், பும்ரா, அர்ஷிதீப் சிங், ஜெய்ஷ்வால், குல்தீப் யாதவ், சூர்யகுமார், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

இந்திய அணியில் மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் முகமது, ஆவேஸ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.