சேலம் மாவட்டத்தில் உள்ள 21 வட்டாரங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணி புரியும் தன்னார்வலர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை; வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்.
தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக கொரோனா நோய் தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கடந்த ஆட்சியின் போது இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பள்ளி நேரம் முடிந்த பின்னர் முதன்மை தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி பயின்று வந்தனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர் பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர்கள் கூறியதாவது,
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 21 வட்டாரங்களில் 3095 இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகிறோம் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கும் நேரடியாக பணியில் ஈடுபட்டோம் மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் முதன்மை மாவட்டமாக சேலம் திகழ்கிறது அதற்காக கடந்த ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாராட்டி உள்ளார் எனவே கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை நேரடியாக களப்பணி செய்து ஆட்சி நிர்வாக அனுபவம் மற்றும் பொது சேவை அனுபவம் பெற்றுள்ள தன்னார்வலர்களுக்கு அரசு தொடர்புடைய பல்வேறு துறைகளில் தகுந்த நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


