சேலம் மாவட்டம், மேட்டூரில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 28 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருவதால் பல மாவட்டங்களில் தண்ணீருக்காகப் போராடி மக்கள் வருகின்றன.
இந்த சூழ்நிலையில், மேட்டூர் அணையின் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக வெளியேறி வருவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்கவும்வலியுறுத்தியுள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)