ட்ரெண்டிங்

தேர்வு மையங்கள் வாரியாக நீட் முடிவுகளை வெளியிடுக! 

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வின் மதிப்பெண் விவரங்களை முழுமையாக வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீட் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (ஜூலை 18) மாலை 04.00 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதிப்பெண் விவரங்களை வெளியிட வேண்டும்; மாணவர்களின் அடையாள வெளியிடக் கூடாது. தேர்வு முடிவுகள் முழுமையாகத் தெரியாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். 

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக நாளை (ஜூலை 19) மாலை 05.00 மணிக்குள் வெளியிட வேண்டும். வினாத்தாள்கள் எந்த அளவுக்கு பரப்பப்பட்டன என்பன உள்ளிட்ட விஷயங்களை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். 

இதையடுத்து, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான வழக்கு ஜூலை 22- ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.