ட்ரெண்டிங்

தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் சதம்! 

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 25) ஒரே நாளில் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.96 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் 107.24, சேலம் 107.06, கரூர் பரமத்திவேலூர்- 106.7டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

சென்னை மீனம்பாக்கத்தில் 98.24 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.