மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1,440 மெகாவாட் மின் உற்பத்திச் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக, 547 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் 605 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்திச் செய்யப்படுகிறது.


