ட்ரெண்டிங்

ரஜினியின் புதிய படத்தின் பெயர் கூலி! 

நடிகர் ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் பெயர் கூலி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி தயாராகிறது. படத்தின் பெயருடன் டீசரையும் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ். 

இந்த டைட்டில் டீசர் வீடியோவில், தங்கத்தைத் திருடி வைக்கப்பட்டிருக்கும் குடோனில் அதிரடியாக நுழையும் ரஜினிகாந்த, அடியாட்களை ஆக்ரோஷமாக அடித்து பறக்கவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் பேசும் பஞ்ச் வசனமும் அனல் பறக்கிறது.

அத்துடன், கூலி படத்தின் பெயருடன் கூடிய டீசர் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.