சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 24, 27 வார்டு பகுதிகளுக்கு தாரமங்கலம் நகராட்சி சமுதாய கூடத்தில் இன்று (நவ.06) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 05.11.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 130,934 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 143,094 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இன்று (06.11.2025) தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 24. 27 வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு தாரமங்கலம் நகராட்சி சமுதாய கூடத்திலும், நங்கவள்ளி பேரூராட்சி 8,9,10,11,12,13,14,15 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு நங்கவள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, செட்டிமாங்குறிச்சி பகுதிக்கு நாச்சிபாளையம் காளியம்மன் கோவில் மண்டபத்திலும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பெரமனூர், பள்ளித்தெருபட்டி பகுதிகளுக்கு பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம். வேப்பிலை பகுதிக்கு வே.கொங்கரப்பட்டி பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், சேனைபாளையம், கல்பாரப்பட்டி பகுதிகளுக்கு வேம்படிதாளம் ஏ.வி.எம் திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
அந்தவகையில் தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 24, 27 வார்டு பகுதிகளுக்கு தாரமங்கலம் நகராட்சி சமுதாய கூடத்தில் இன்று (06.11.2025) நடைபெற்ற முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தாரமங்கலம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவியர்களிடம் இந்நூலகத்தின் பயன் குறித்தும் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.



-SXgDfGgJfO.jpg)