ட்ரெண்டிங்

33 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டி?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 33 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்டிபிஐ 1 தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதியும் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அ.தி.மு.க. தலைமை, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை நிறைவுச் செய்துள்ளது.  

முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று (மார்ச் 20) காலை 10.00 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இன்னும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதுச்சேரி உட்பட 33 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.