சேலம் வழியாக வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் இயக்கப்படும் கோவை-திருப்பதி-கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் (22616/ 22615) LHB பெட்டிகள் இணைக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். குறிப்பாக, இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LHB பெட்டிகள் இணைப்பு வரும் மார்ச் 30- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

-yDnetw3Pe0.jpg )
-SXgDfGgJfO.jpg)