ட்ரெண்டிங்

6 ரயில் சேவைகள் நீட்டிப்பு! 

பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக செல்லும் ஆறு ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கொச்சுவேலி- ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 06071) வரும் ஜூன் 28- ஆம் தேதி வரையும், ஹஸ்ரத் நிஜாமுதீன்- கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 06072) வரும் ஜூலை 01- ஆம் தேதி வரையும், கொச்சுவேலி- ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 06081) ஜூன் 28- ஆம் தேதி வரையும், ஷாலிமார்- கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 06082) ஜூலை 01- ஆம் தேதி வரையும், கொச்சுவேலி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 06083) ஜூலை 02- ஆம் தேதி வரையும், பெங்களூரு- கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 06084) ஜூலை 03- ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.