ட்ரெண்டிங்

மாநில தேர்தல் ஆணையர் நியமனம்!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமார் ஓய்வுப் பெற்றார். இதையடுத்து, தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறைச் செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. வெளியிட்டுள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரப் பெற்ற அமைப்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.