தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை நிறைவுச் செய்தது தி.மு.க.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க வின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.


-SXgDfGgJfO.jpg)