ஆதார் கார்டு விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இணையதளம் மூலம் இலவசமாக வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்களை ஆதார் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என தகவல் வெளியானதால் பல இடங்களில் கூட்டம் அலைமோதியது.
இந்த சூழலில், ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 14- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


