ட்ரெண்டிங்

ஏற்காடு கோடை விழா- வாண்டுகளைக் கவர்ந்த மிக்கி மவுஸ்! 

47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி ஆகியோர் இன்று (மே 22) மதியம் 02.00 மணிக்கு தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டனர்.

ஏற்காடு கோடை விழாவையொட்டி, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். 12,000 மலர்களால் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த ஆக்டோபஸ் வடிவம் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

அதேபோல்,  6,000 மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நட்சத்திர மீன் வடிவம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.  24,000 மலர்களால் உருவாக்கப்பட்டிருந்த டொனால்ட் டக் ,மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெரி ஆகிய வடிவங்கள் குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. 

ஏற்காட்டில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.