ட்ரெண்டிங்

உய்யகொண்டான் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுக- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்! 

புதிய கட்டளை மேட்டுக் கால்வாய் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து காவிரியில் 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வரத்து உள்ளது. எனவே விரைவில் உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்படும் சூழ்நிலையில், கல்லணை தலைப்பில் உள்ள பூதலூர் தாலூக்காவின் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள 165 ஏரிகளை நிரப்பிட மாயனூரில் இருந்து புதிய கட்டளை மேட்டுக்கால்வாய் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டு 165 ஏரிகள் உட்பட, அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை நிரப்பிட உடனடியாக நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.