ட்ரெண்டிங்

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு! 

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில், மகளிர் தினத்தையொட்டி, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது. நாட்டில் பல கோடி பெண்களின் குடும்ப நிதி சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும். மலிவு விலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் வழங்குவதன் மூலம் நமது பெண்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், பிரதமரின் அறிவிப்பால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.