ட்ரெண்டிங்

சேலம் மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளவர்கள் யார் யார்?

சேலம் மக்களவைத் தொகுதியில் பிரதான கட்சிகளை வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளவர்கள் யார்? யார் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

ஆளும் தி.மு.க. சார்பில் உதயநிதி ரசிகர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.கே.பாபு, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, தற்போதைய தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேசமயம், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டால் வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தியை நிறுத்தப்படலாம். 

பா.ஜ.க. சார்பில், கட்சியின் மாநில நிர்வாகியாக உள்ள ஜெயராமன், மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாம் தமிழர் கட்சி சார்பில், கட்சியின் சேலம் தொகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரத்னா, கொள்கைப் பரப்புச் செயலாளர் நல்லான் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படலாம்.