கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சிகத்தை பொதுமக்கள் நாளை (மார்ச் 06) முதல் கட்டணமின்றி காணலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் சமீபத்தில் திறக்கப்பட்டது. நினைவிடத்தில் அருங்காட்சியகமும் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை நாளை (மார்ச் 06) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி தேவையில்லை என்றும், அருங்காட்சியகத்தைக் காண இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத்தைக் காண ஒரு அலைபேசி எண் மூலம் ஐந்து அனுமதி சீட்டுகள் பெற முடியும் எனவும், ஒவ்வொரு நாளும் காலை 09.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 கால அளவுகளில் பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



-hcTFAGMRGb.jpg)