ட்ரெண்டிங்

வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல்- கோவை இடையே வாராந்திர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மார்ச் 05, 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல்- கோவை இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

இந்த வந்தே பாரத் ரயில்கள் சென்னை சென்ட்ரல், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.