ட்ரெண்டிங்

தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணியை மேற்கொள்ளும் வனத்துறை!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டார பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேர்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும், பறவைகளும் வசித்து வருகின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால் நீர்நிலைகள் வற்ற தொடங்கியுள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

மேலும் ஊருக்குள் தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் கடித்து குதறுவதால், அவை பரிதாபமாக இறக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வண்ணம் வனவிலங்குகள் வந்துச் செல்லும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்த பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.