ட்ரெண்டிங்

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு! 

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 65 ML சாக்கோ பார் ரூபாய் 20- லிருந்து ரூபாய் 25 ஆகவும், பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் 125 ML ரூபாய் 28- லிருந்து ரூபாய் 30 ஆகவும், கிளாசிக் கோன் வெண்ணிலை 100 ML  ரூபாய் 30- லிருந்து ரூபாய் 35 ஆகவும், கிளாசிக் கோன் சாக்லேட் 100 ML ரூபாய் 30- லிருந்து ரூபாய் 35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு வரும் மார்ச் 03- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.