50 லட்சம் கையெழுத்து அல்ல; 50 கோடி கையெழுத்துகளை வாங்கினாலும் நீட் தேர்வை தி.மு.க.வால் ஒழிக்க முடியாது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக, சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு வருகைத் தந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு, கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், "50 லட்சம் கையெழுத்து அல்ல; 50 கோடி கையெழுத்துகளை வாங்கினாலும் நீட் தேர்வை தி.மு.க.வால் ஒழிக்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களைக் குழப்ப தி.மு.க.வினர் முயற்சிக்கின்றனர். உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்ட பிறகு அவர்களால் என்ன செய்ய முடியும்?எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.



-hcTFAGMRGb.jpg)