சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், வரும் அக்டோபர் 30, 31, நவம்பர் 03 ஆகிய தேதிகளில் இயக்கப்படவிருந்த ஈரோடு- சென்னை சென்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் (ரயில் எண் 06094), சென்னை சென்ட்ரல்- ஈரோடு சூப்பர் ஃபாஸ்ட் ரயில் (ரயில் எண் 06093) ஆகிய ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எனவே, பயணிகள் மாற்று ரயில்களில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.



-hcTFAGMRGb.jpg)