ட்ரெண்டிங்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு! 

2024- ஆம் ஆண்டு தொடக்க முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதமும் 23.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அந்த வகையில், 19 கிலோ எடைக்கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 23.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூபாய் 1,960.50 விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த விலையேற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 36 ரூபாய் அதிகரித்துள்ளது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 918.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.