ட்ரெண்டிங்

முட்டை விற்பனை சரிவு! 

மாசி மகம், மஹா சிவராத்திரியையொட்டி, முட்டை விற்பனை சரிந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 23- ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.50 ரூபாயில் இருந்து 10 காசுகளும், பிப்ரவரி 22, 27 ஆகிய தேதிகளில் தலா 20 காசுகளும், பிப்ரவரி 28- ஆம் தேதி மேலும் 10 காசுகளும் விலை குறைந்து 5 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இன்று (பிப்.29) மேலும் 20 காசுகள் குறைந்து 4.80 ரூபாயாக ஒரு முட்டையின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாசி மகம் மற்றும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, முட்டை விற்பனை குறைந்த நிலையில், முட்டை விற்பனையை உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக முட்டை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.