ட்ரெண்டிங்

கோவை- கயா எக்ஸ்பிரஸ் தன்பாத் வரை நீட்டிப்பு!

 

கோவை- கயா எக்ஸ்பிரஸ் தன்பாத் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- கயா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி, தன்பாத்- கோவை வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைதோறும் மாலை 04.10 மணிக்கு கிளம்பி, கயா, மிர்ஷாபூர், வாராங்கல், விஜயவாடா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், வழியே திங்கள் மாலை 06.30 மணிக்கு கோவையை வந்து சேரும். கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்கிழமைதோறும் காலை 07.50 மணிக்கு புறப்பட்டு வியாழன்கிழமை மதியம் 01.00 மணிக்கு தன்பாத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.