ட்ரெண்டிங்

பல்கலைக்கழக பதிவாளர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- உயர்நீதிமன்றம் கேள்வி!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

பணியிடை நீக்கம் செய்ய உயர்க்கல்வித்துறைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவுக்கு தடைக்கோரி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (பிப்.28) மாலை 04.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

 

வழக்கை விசாரித்த நீதிபதி, பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு 20 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லையே ஏன்? பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு வரும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

இதனிடையே நாளை (பிப்.28) ஓய்வுபெறவுள்ள பதிவாளர் தங்கவேலுக்கு வரும் மார்ச் 31- ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.