ட்ரெண்டிங்

தமிழ் இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே நோக்கம்!

நாளை (ஏப்ரல் 13) மாலை 06.00 மணிக்கு சேலம் 3 ரோட்டில் உள்ள ஜவஹர் மில் மைதானத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தலைமையில் பாடகர்கள் சைந்தவி, கார்த்திக் உள்ளிட்ட புகழ்பெற்ற பாடகர்களும், முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் இசை நிகழ்ச்சியைக் காண பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் காதல் ஜோடிகள் உள்ளிட்டோர் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சேலம் செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து சேலத்தில் முதன்முறையாக பிரம்மாண்ட மேடையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 16- க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு பாடவுள்ளனர். 

மொத்தம் 32 பாடல்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட உள்ளது. 3 மணி நேரம் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியில்  கலந்து கொள்ளும் பாடகர்கள், பொதுமக்கள் அமர்ந்துள்ள இடம் அருகில் சென்று வர தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.பிரபுதேவாவின் சகோதரர் நாகராஜ் பிரசாத் நடனக் குழுவினர் பாடலுக்கு ஏற்றபடி நடனமாட உள்ளனர்.இந்த இசை நிகழ்ச்சி ஒரு புது அனுபவமாக இருக்கும். 

வாழ்க்கை என்பது ஒரு சுவாரஸ்யமான பரிசு;அந்த நிகழ்வு தெரியாமல் நடக்கும் போது நன்றாக இருக்கும். நமது வேலையை நாம் செய்துக் கொண்டிருப்போம்;அதற்கான பலன் அந்தந்த நேரத்தில் நமக்கு வந்து சேரும். இவ்வாறு ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு வரவிருக்கிறார்கள்;அதுவே எனக்கு அவார்டு தந்தது போல் தான் இருக்கிறது; முழுமையாக மகிழ்ச்சி அடைகிறேன்.உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்த்தால் எப்படி ஒரு எனர்ஜி கிடைக்குமோ அதுபோல் இந்த இசை நிகழ்ச்சி அமையும். ரசனையை நோக்கித் தான் சென்றுக் கொண்டிருக்கிறோம்; ரசனையை ஜட்ஜ் பண்ணாதீர்கள். 

கொரோனாவிற்கு பிறகு கான்செர்ன்ட் நிகழ்ச்சி பிரபலமடைந்துள்ளது. பொதுமக்கள் நேரடியாக இசை நிகழ்ச்சியை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இசை என்பது ஒரு மேஜிக்; இசைக்கு மொழி கிடையாது; மறைந்த பாடகர்களின் இசையை ஏஐ மூலம் உருவாக்குவதைத் தவிர்த்து மற்ற பாடகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்; தமிழ் இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே எனது நோக்கம். உருவாக்கப்பட்ட பாடலை மற்றவர்கள் பாடும் போது நிறைய பாடகர்கள் உருவாகுகின்றனர். அனைவரும் இசை நிகழ்ச்சியைக் காண வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

இசையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு விழா எடுத்திருப்பது குறித்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், சமூக ஊடகங்கள் புதிய இசைக் கலைஞர்களை உருவாக்குகின்றன; வாய்ப்பு தேடி யாரையும் அணுகாமல் திறமை உள்ளவர்கள் அருமையாக முன்னேற சமூக ஊடகங்கள் வழி வகுக்கின்றன; ஒரு கலைஞர் புகழுடன் இருக்கும்போதே அவருக்கு விழா நடத்துவது மகிழ்ச்சிக்குரியது எனத் தெரிவித்தார். 

ஜஸ்ட் நவ் சேலம் வாசகர்களா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் அசத்தல் ஆஃபர்! ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியை நேரில் காண அரிய வாய்ப்பு! உடனே 77080-07612 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளுங்கள்!