ட்ரெண்டிங்

இருவேறு சமூகத்தினரிடையே மோதல்- 7 பேர் மீது வழக்குப்பதிவு! 

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள கோட்டை மடுவு பகுதியில் சிறுமிகளை இளைஞர்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமிகளின் உறவினர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்தனர். 

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய ஏழு பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஐந்து பேரைத் தேடி வருகின்றனர். 

அதே சமயம், சிறுமிகளை கேலி செய்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், நான்கு இளைஞர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழல் நிலவுவதால் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.